சினிமா
இவ பெரிய ஆளுன்னு, என் புருஷன் திட்டினாரு!! நடிகை செந்தில் குமாரி ஓபன் டாக்..

இவ பெரிய ஆளுன்னு, என் புருஷன் திட்டினாரு!! நடிகை செந்தில் குமாரி ஓபன் டாக்..
சின்னத்திரை சீரியலிலும் படங்களிலும் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை செந்தில் குமாரி. பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் செந்தில் குமாரி, பசங்க படம் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது, ஆனால் வீட்டில் அம்மா ரோல் மட்டும் நடிச்சா போதும் என்று கூறியதால் அதில் நடிக்கவில்லை. ஒருமுறை கோவிலுக்கு சென்ற போது ரசிகர்கள் பலர் வந்து செல்ஃபி எடுத்தார்கள்.என் கணவருக்கு அது பிடிக்கவில்லை. இவங்க என்ன பெரிய ஆளுன்னு எதுக்கு வந்து எடுக்குறீங்க, போங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதெல்லாம் தப்பான விஷயம் என்று என்னை என் கணவர் திட்டினார்.என் கணவருக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை, நானே தான் நடிக்க விருப்பப்பட்டு கெஞ்சி கேட்டு நடித்தேன். என் கூட நீங்களே வாங்க என்று கேட்டு நடிக்க வந்தேன். என் படம் ஒன்று கூட என் கணவர் பார்த்ததில்லை, என் குழந்தைகளையும் பார்க்க வைப்பதில்லை என்று செந்தில் குமாரி தெரிவித்துள்ளார்.