இலங்கை
கட்டுநாயக்கவில் சற்றுமுன் துப்பாக்கி சூடு

கட்டுநாயக்கவில் சற்றுமுன் துப்பாக்கி சூடு
கட்டுநாயக்க, ஹுனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க, ஹுனடியன பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீடொன்றில் இருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.