சினிமா
தனுஷ் ரசிகர்களுக்கு கிடைத்த குட் நியூஸ்…! படக்குழு வெளியிட்ட சூப்பரான அப்டேட்…!

தனுஷ் ரசிகர்களுக்கு கிடைத்த குட் நியூஸ்…! படக்குழு வெளியிட்ட சூப்பரான அப்டேட்…!
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிப்பு மற்றும் கதையமைப்பால் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ள நடிகர் தான் தனுஷ். இவர் தற்போது தனது புதிய படமான “இட்லி கடை” படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.அந்தவகையில் தனுஷ் மற்றும் படக்குழு இப்பொழுது அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிவிப்புடன் ரசிகர்களிடையே ‘இட்லி கடை’ படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.’இட்லி கடை’ என்ற டைட்டிலே ஒரு விதமான சுவாரஸ்யத்தையும், ரசிகர்களிடம் ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் தனுஷின் நடிப்பிற்கு முற்றிலும் புதியதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவல் அனைத்து ரசிகர்களையும் சந்தோசத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.