இலங்கை
தமிழர் பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி கொண்ட குடும்பஸ்தருக்கு வந்த வினை

தமிழர் பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி கொண்ட குடும்பஸ்தருக்கு வந்த வினை
வவுனியா – போகஸ்வெவ பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா – போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) மாலை கண்ணாடி போத்தலால் தனது வயிற்றுப்பகுதியை குத்தி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.