சினிமா
நடிகர்கள் கேமராவுக்கு பின்னால் பெண்களை.. நடிகை மாளவிகா சொன்ன அதிர்ச்சி விஷயம்

நடிகர்கள் கேமராவுக்கு பின்னால் பெண்களை.. நடிகை மாளவிகா சொன்ன அதிர்ச்சி விஷயம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.இந்நிலையில், சினிமாவில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் வேதனை தெரிவித்துள்ளார்.அதில், ” சினிமாவில் சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள்.ஆனால் கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என்பதை கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள்.ஆண் என்றால் ஒரு மாதிரி, பெண் என்றால் ஒரு மாதிரி பார்க்கும் கண்ணோட்டம் எப்போது மாறும் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.