Connect with us

இந்தியா

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வீடுகள் இரவோடு இரவாக தரைமட்டம்

Published

on

Homes of 2 wanted for Pahalgam terror attack blown up overnight Tamil News

Loading

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வீடுகள் இரவோடு இரவாக தரைமட்டம்

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த மிருகத்தனமான தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆங்கிலத்தில் படிக்கவும்: Homes of 2 wanted for Pahalgam terror attack blown up overnightஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இந்திய விமானப்படை விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன.இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவரின் வீடுகளும் தெற்கு காஷ்மீரில் இரவோடு இரவாக வெடிபொருட்களைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கப்பட்டுள்ன. தெற்கு காஷ்மீரின் டிராலில் உள்ள மோங்கஹாமில் ஆசிப் அகமது ஷேக்கின் வீடு இடிக்கப்பட்டதுடன், தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள குர்ரே கிராமத்தில் உள்ள அடில் அகமது தோக்கரின் வீடும் ஏப்ரல் 24-25 இரவு வெடித்துச் சிதறியது. வீடுகள் “வெடிபொருட்களைப் பயன்படுத்தி இடிக்கப்பட்டன” என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை, தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்த தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் பெயர்களை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்டது. இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களைத் தவிர,  அடில் அகமது தோக்கரின் ஓவியமும் மூவரில் இடம்பெற்றுள்ளது. தெற்கு காஷ்மீரில் வசிக்கும் அடில் அகமது தோக்கர், 2018 இல் விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்று கடந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்குக்குத் திரும்பியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்காவது தாக்குதல் நடத்தியவரின் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது.ஆசிப் அகமது ஷேக்கின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினர் தங்கள் வீட்டை “வெடித்துத் தகர்த்ததாக” உறுதிப்படுத்தினர். உறவினர்களில் ஒருவர் வீடு மூன்று குடும்பங்களுக்குச் சொந்தமானது என்றும், ஆசிஃபின் “அதில் இரண்டு அறைகள் மட்டுமே இருந்தன” என்றும் கூறினார்.மற்றொரு குடும்ப உறுப்பினர் கூறுகையில், பாதுகாப்புப் பணியாளர்கள் வீட்டை காலி செய்து, இடிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன