இலங்கை
பாடசாலை விடுமுறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பாடசாலை விடுமுறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக, மே மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையிலேயே, மே மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை மே மாதம் 4ஆம் திகதி கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.