பொழுதுபோக்கு
முத்து போட்ட மாஸ்டர் ப்ளான்: மீனாவின் பணம் கிடைக்குமா? சிறகடிக்க ஆசையில் இன்று!

முத்து போட்ட மாஸ்டர் ப்ளான்: மீனாவின் பணம் கிடைக்குமா? சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவின் பணத்தை கண்டுபிடிக்க, முத்து செய்த நாடகத்தால், பார்வதி உண்மையை சொல்ல, முத்து அதை வைத்து ஒரு ப்ளான் போடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், சீதா அருணுக்கு போன் செய்து, நடந்த விஷயத்தை சொல்லி, பணம் கொடுப்பதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகும் என்று சொல்ல, நான் இப்போ உன்கிட்ட பணத்தை பற்றி பேசல, ஆனா உங்க அக்கா கிட்ட இருந்து பணத்தை யார் திருடிட்டு போனாங்கன்னு நான் கண்டுபிடிக்க சொல்றேன் என்று சொல்கிறான். அதற்கு சீதா வேண்டாம் எங்க மாமா பார்த்துக்கொள்வார் என்று சொல்ல, எனக்கு நீ மட்டும் இல்ல உன்னுடைய குடும்பமும் முக்கியம் நான் அதற்காக உதவி செய்கிறேன் என்று அருண் சொல்கிறான்.இந்த பக்கம் பார்வதி வீட்டுக்கு வரும், முத்து, மீனாவின் நிலைமையை சொல்லி அழுவது போன்று நடிக்கிறார். இதை நம்பிய பார்வதி, சிந்தாமணியும் விஜயாவும் தான் மீனாவை பழிவாங்கனும்னு பேசிகிட்டு இருந்தாங்க என்ற விஷயத்தை சொல்ல, இதை தெரிந்துகொண்ட முத்து புது ப்ளான் செய்து, நீங்க நாளைக்கு மட்டும் அவங்களை இங்க வர வச்சு ஒரு மூணு மணி நேரம் வீட்டை விட்டு வெளியே போகாம பாத்துக்கோங்க என்று பார்வதியிடம் சொல்ல, அவரும் சரி என்று சொல்லிவிடுகிறார். அதன்பிறகு முத்து செல்வத்தை தனது வீட்டுக்கு வர சொல்கிறான்.மறுபக்கத்தில் மீனா ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு ஆட்டோ டிரைவர் மீனாவின் வண்டியை நிறுத்தி நான் ஒரு அம்மாவை ஏற்றிக்கொள்ளும்படி உதவி கேட்க, மீனாவும் சரி என்று அழைத்து செல்கிறார். அவர் அருணின் அம்மா, ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு காட்டிக்கொண்டு வர, சீதா அவருக்காக காத்துக் கொண்டிருக்க அருண் அம்மா சீதாவிடம் இந்த பொண்ணுதான் என்னை கூட்டிட்டு வந்தாங்க என்று மீனாவை அறிமுகப்படுத்த, சீதாவை பற்றி மீனாவிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.இதை பார்த்த சீதா இவர் தான் என் அக்கா என்று சொல்ல, உங்க குடும்பத்துல எல்லாருமே மத்தவங்களுக்கு உதவுகிற மனப்பான்மை இருக்கு. உங்க அம்மா அப்பா நல்லா வளர்த்திருக்காங்க என்று சொல்ல, சீதா ஒரு நர்ஸிடம் சொல்லி உள்ளே அழைத்து செல்ல சொல்கிறார். அதன்பிறகு சீதா விஷயத்தை சொல்ல,அப்போ இது தான் உன் மாமியாரா? உனக்காவது இது மாதிரி ஒரு மாமியார் கிடைச்சிருக்கு என்று சொல்லி, விஜயா நடந்துகொள்ளும் விதம் குறித்து கவலைப்படுகிறார்.அடுத்து, முத்து ரவி மற்றும் ஸ்ருதியை மாடிக்கு கூப்பிட்டு வந்து பேச அவ்போது செல்வமும் வந்ததும் நாளைக்கு நம்ம இன்கம்டாக்ஸ் ஆபிஸரா மாறி ஒரு வீட்டில ஆராய்ச்சி பண்ண போறோம் என்று சொல்ல, ரவி அது கிரைம் டா என்று சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.