சினிமா
விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மலையாள ஹீரோ…! யார் தெரியுமா ?

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மலையாள ஹீரோ…! யார் தெரியுமா ?
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பிஸியாக படங்களில் நடித்து வருகின்றார்.”மகாராஜா” படம் வெற்றியை அளித்ததுடன் வசூல்ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் அப்டேட் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது . தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருவதுடன் தெலுங்கிலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது . இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக பகத்பாசில் நடிக்க உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே புஷ்பா,மாமன்னன் போன்ற படங்களின் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார் .ஏற்கனவே இவர்கள் இருவரும் ஹீரோவாகவும் ,வில்லனாகவும் நடித்து ரசிகர்களை மனதில் இடம் பிடித்திருந்தனர் .அந்த வைகையில் இவர்களின் கூட்டணி எப்படி இருக்க போகின்றது என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.