இலங்கை
விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கும் மேலும் 37 பாடாலைகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.