தொழில்நுட்பம்
வெறும் ரூ.14,000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவியா? ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு!

வெறும் ரூ.14,000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவியா? ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு!
இந்தியாவில் பல முன்னணி நிறுவனம் போட்டிப்போட்டு கொண்டு பட்ஜெட் விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக 32 இன்ச், 40 இன்ச் டிவிகளை விட 43 இன்ச் டிவிகளுக்கு அதிக வரவேற்புள்ளது. கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை (best smart tvs) இந்தப் பதிவில் பார்க்கலாம்.பிளிப்கார்ட் தளத்தில் கேண்டி (CANDY) 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன், டால்பி ஸ்பீக்கர்கள், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. கேண்டி ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.பிளிப்கார்ட் தளத்தில் CA43C9UG என்ற மாடல் நம்பர் கொண்ட கேண்டி 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 51% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.13,999 விலையில் வாங்க முடியும்.கேண்டி 43 இன்ச் டிவி அம்சங்கள்: 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த CANDY 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்து. மேலும், இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளதால் இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். டால்பி விஷன் (Dolby Vision), 16.07 மில்லியன் கலர்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பல்வேறு அசத்தலான டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. கூகுள் டிவி ஓ.எஸ் (Google TV OS) மூலம் இந்த CANDY டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.மல்டிடாஸ்கிங் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் ஜிபி மெமரி வசதியுடன் இந்த அசத்தலான 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்தது. இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் 16W டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் பல்வேறு ஆடியோ மோட் மற்றும் பிக்சர் மோட் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது CANDY டிவி.எச்.டி.எம்.ஐ போர்ட்கள், யு.எஸ்.பி போர்ட், வைஃபை, ஆப்டிகல் (Optical), ஆர்.எப் (RF), ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.