இலங்கை
வெள்ள நீரால் மூழ்கிய நுவரெலியா விவசாய நிலங்கள்

வெள்ள நீரால் மூழ்கிய நுவரெலியா விவசாய நிலங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் நுவரெலியா கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் இன்று (26) மாலை ஏற்பட்ட வெள்ள நீரால் பிரதான வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக பிற்பகல் நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் தாழ்நிலப் பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்ட போதிலும் இன்று பெய்த மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் விவசாயிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.