வணிகம்
8 போஸ்ட் ஆபீஸ் டெபாசிட் ஸ்கீம்… அடிக்கடி மாறும் வட்டி விகிதம்; உங்க போனில் இப்படி செக் பண்ணுங்க!

8 போஸ்ட் ஆபீஸ் டெபாசிட் ஸ்கீம்… அடிக்கடி மாறும் வட்டி விகிதம்; உங்க போனில் இப்படி செக் பண்ணுங்க!
அஞ்சல் அலுவலகங்களில் தபால் சேவைகளையும் கடந்த பல்வேறு விதமான நிதி மேலாண்மை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் இந்த திட்டங்கள் வழங்கப்படுவதால், பெரும்பாலான மக்களின் விருப்பத் தேர்வாக இவை இருக்கின்றன.குறிப்பாக, 8 விதமான வைப்பு நிதி திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தில் உள்ளன. இதன் வட்டி விகிதங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. இவை சில நேரங்களில் அதிகரிக்கின்றன; சில நேரங்களில் குறைகின்றன.அடிக்கடி இந்த வட்டி விகிதங்கள் மாற்றப்படுவதால் இவற்றை தெரிந்து கொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். அதன்படி, மக்கள் இதனை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் துறை சார்பாக ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நமது ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து போஸ்ட் இன்ஃபோ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை ஓபன் செய்தால், அதில் ஆறாவது ஆப்ஷனாக இண்ட்ரெஸ்ட் கால்குலேட்டர் என்பது இருக்கும்.அதனுள் சென்றால் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு வைப்பு நிதி திட்டங்களின் விவரமும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக நமக்கு தேவையான திட்டத்தின் வட்டி விகிதங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துவதால், இதில் இருக்கும் தகவல்களில் நம்பகத்தன்மை இருக்கும். மேலும், இதில் இருந்து விவரங்களை பெற்றுக் கொள்வதால் நேரடியாக அஞ்சல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.நன்றி – Star Online Youtube Channel