Connect with us

இலங்கை

அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கறிஞர்கள்

Published

on

Loading

அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கறிஞர்கள்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த நோட்டீஸ் கடந்த மார்ச் 10 ஆம் திகதி வழக்கறிஞர் ஒருவர் ஊடாக, 59 வயது ஜெர்மன் குடிமகன் ஒருவர் சார்பாக அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

அர்ஜுனா ராமநாதன் மற்றும் எச்.பி. சமரகோன் ஆகியோர் 2025 பிப்ரவரி 12 ஆம் திகதி பேஸ்புக்கில் வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டனர்.

Advertisement

இதில் குற்றம் சாட்டப்பட்ட ஜேர்மன் குடிமகன் , குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டதன் விளைவாக, அவரது மனைவி மற்றும் மகள் கடுமையான மன உளைச்சலுக்கும், பொது அவமானத்திற்கும் ஆளானதாகவும், குறித்த நபரின் நற்பெயருக்கு கடுமையான சேதம் விளைவித்ததாகவும், அவரது தொழில் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன