சினிமா
ஆரம்பமானது சூர்யா – லக்கிபாஸ்கர் இயக்குநர் கூட்டணி..ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்திய அப்டேட்!

ஆரம்பமானது சூர்யா – லக்கிபாஸ்கர் இயக்குநர் கூட்டணி..ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்திய அப்டேட்!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நடிகர்களில் ஒருவராக சூர்யா விளங்குகின்றார். தற்போது அவர் தனது 46வது திரைப்படத்திற்கான புதிய பயணத்தை தொடங்க உள்ளார் என்பதைக் குறித்த ஒரு சூடான தகவல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் வெளிவந்து நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் “லக்கி பாஸ்கர்”. அந்த படத்தின் இயக்குநராக இருந்தவர் வெங்கி அட்லூரி. இவர் தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து அவரது 46வது படத்தினை இயக்கவுள்ளதாக தகவல்கள் உறுதியாகி வருகின்றன.இது சூர்யாவுக்கு ஒரு புதிய இயக்குநருடன் உருவாகும் புதிய முயற்சி என்பதால், ரசிகர்களிடையே இது பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இப்படத்தின் கதையும் திரைக்கதையும் வெங்கி அட்லூரி தான் உருவாக்கியிருக்கிறார். அத்துடன் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கின்றன. இத்தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.