இலங்கை
உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய குற்றவாளியிடம் சிக்கிய கைத்தொலைபேசி

உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய குற்றவாளியிடம் சிக்கிய கைத்தொலைபேசி
தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள ஹரக் கட்டா, உயர் பாதுகாப்பு சிறையில் இருந்தபோது இந்த கையடக்கத் தொலைபேசியை எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.