இலங்கை
கோர விபத்தில் சிக்கிய தாயின் மோட்டார் சைக்கிள் ; பலியான மகன்கள்

கோர விபத்தில் சிக்கிய தாயின் மோட்டார் சைக்கிள் ; பலியான மகன்கள்
குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் தங்கள் தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளையிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை விபத்தில் காயமடைந்த தாய் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.