விளையாட்டு
தாய்மையை விட தாய்ப்பால் கொடுப்பதுதான் கஷ்டம்: சானியா மிர்சா புலம்பல்

தாய்மையை விட தாய்ப்பால் கொடுப்பதுதான் கஷ்டம்: சானியா மிர்சா புலம்பல்
இந்திய பெண் டென்னிஸ் வீராங்கனை என்று பரவலாகக் கருதப்படும் சானியா மிர்சா, தனது மகன் இஸான் மிர்சா மாலிக்கிற்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தான் எதிர்கொண்ட உணர்ச்சிகரமான சவால்களைப் பற்றி கூறியுள்ளார். தி மசூம் மினாவாலா என்ற ஷோவில் ஏப்ரல் 21 எபிசோடில், சானியா மிர்சா, கர்ப்பத்தை விட தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியாக அதிக வலி என்று கூறினார். அவர் கிட்டத்தட்ட தனது குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்ததாகவும் குழந்தைக்கு ஒரே ஊட்டச்சத்து தாய்ப்பால் என்பதால் அதனை கொடுக்கும்போது ஏற்பட்டும் மன அழுத்தம் காரணமாக குறித்தும் கூறினார். தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான தாய்ப்பால் ஊட்டல் உடல் சோர்வை அதிகரித்ததாக சானியா கூறினார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், “நான் இரண்டரை முதல் 3 மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரை, அது கர்ப்பத்தின் கடினமான பகுதியாகும், நான் சொல்ல வேண்டும். நான் இன்னும் மூன்று முறை கர்ப்பம் தரிப்பேன், ஆனால் மீண்டும் தாய்ப்பால் கொடுப்படு முறையை என்னால் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே மனரீதியாவும் ஹார்மோன்ஸ் மாற்றங்களும் மன அழுத்தத்தை கொடுக்கிறது”. சானியா மிர்சா மற்றும் முன்னாள் கணவர் சோயிப் மாலிக் 2018 ஆம் ஆண்டு மகன் இஷானை வரவேற்றனர். தி மாசூம் மினாவாலா ஷோவில், தனது மகனுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும் என்ற விருப்பத்தால் தான் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணங்களையும் சானியா பகிர்ந்து கொண்டார். இஷானின் வளரும் பருவத்தில் அவர் உடனிருந்து அவருக்குத் தேவையானவற்றை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.