Connect with us

இந்தியா

புதுச்சேரியில் ரவுடி உமாசங்கர் வெட்டிப் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

Published

on

Pondy deadbody

Loading

புதுச்சேரியில் ரவுடி உமாசங்கர் வெட்டிப் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் காமராஜ் நகர் தொகுதி பா.ஜ.க பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது ஏற்கனவே, வழிப்பறி, பாலியல் தொழில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனஇந்த சூழலில், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த உமாசங்கர், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, 5 இருசக்கர வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல், உமாசங்கரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த உமா சங்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர், அவருடைய சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன