Connect with us

இலங்கை

பொன்னர் சங்கர் நாடகத்தின் போது விபரீதம் ; 60 அடி கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர்

Published

on

Loading

பொன்னர் சங்கர் நாடகத்தின் போது விபரீதம் ; 60 அடி கம்ப மரத்திலிருந்து விழுந்த நபர்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று  (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த முருகன் சதாசிவம் (வயது 63) என்பவர் எனவும் இவர் பொன்னர் சங்கர் கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி

நேற்று (26) இரவு ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரை இடம்பெற இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன