Connect with us

தொழில்நுட்பம்

போன்ல இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருக்கிறதா? இதை செஞ்சா ஸ்பீட் சும்மா பிச்சுக்கும்.!

Published

on

increase-internet-speed

Loading

போன்ல இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருக்கிறதா? இதை செஞ்சா ஸ்பீட் சும்மா பிச்சுக்கும்.!

நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது சில நேரங்களில் இணைய வேகம் குறைந்து உங்களை கடுப்பேற்றுகிறதா? என்ன தான் ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data plans) நன்மை கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்திருந்தாலும், அவ்வப்போது, உங்கள் போனில் இன்டர்நெட் வேகம் குறைவதை கண்டு கவலையடைகிறீர்களா? இதற்கு காரணம் நெட்வொர்க் கவரேஜாக இருக்கும் என்று தவறாக புரிந்துகொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? இந்தப் பதிவு உங்களுக்கானதுதான்.என்னதான் ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை கிடைக்கும் திட்டத்தை அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்திருந்தாலும் கூட, உங்கள் இணைய வேகம் சில நேரங்களில் மெதுவாக லோட் ஆகிறதா? இதற்கு நீங்கள் இருக்கும் இடத்தில் நெட்வொர்க் கவரேஜ் சரியாக கிடைக்கவில்லை என்று தவறாக நினைத்துக்கொள்வீர்கள். அப்படியில்லை, உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகம் (Internet speed) குறைவாக இருக்கிறதா?அப்படியானால் உங்களுடைய ஸ்மார்ட்போன் செட்டிங்கில் (smartphone settings) சில மாற்றங்களை உடனே மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்களை நீங்கள் மேற்கொண்டால் உங்கள் ஸ்மார்ட்போனின் ‘இன்டர்நெட் வேகம்’ சும்மா மின்னல் வேகத்தில் பிச்சுக்கும்.!உங்கள் போனில் ஏற்படும் ஸ்லோ இன்டர்நெட் சிக்கலுக்கு உங்களுடைய டேட்டா பேக்கோ (அ) உங்கள் நெட்வொர்க்கோ ஒரு காரணம் இல்லை. நீங்கள் ரீசார்ஜ் செய்த ஹை ஸ்பீடா டேட்டா திட்டம், உண்மையிலேயே வேகமாக இணைய சேவையை வழங்கினாலும், உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்டிருக்கும் சில தகவல்களால்தான் உங்கள் இன்டர்நெட் வேகம் குறைகிறது. இந்த விஷயத்தை புரிந்துகொண்டு, இதை சரி செய்துவிட்டாலே, உங்கள் போனில் இன்டர்நெட் வேகம் நீங்கள் எதிர்பார்த்ததை போல வேகமாகிவிடும். மந்தமாக செயல்படும் உங்கள் போனில், இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றிதான் இந்தப் பதிவின் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் போனின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க செய்யுங்கள்.இன்டர்நெட் வேகம் குறைய என்ன காரணம்?ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் சேவ் செய்யப்பட்டிருக்கும் பிரௌசர் டேட்டாக்களை (browser data) மற்றும் இன்டர்நெட் தகவல்களால்தான் இணைய வேகம் மெதுவாகிறது. இதை சரிசெய்ய, சில குறிப்பிட்ட செட்டிங்கை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும் (how to increase data speed in your mobile). 1. உங்கள் போனில் உள்ள நார்மல் செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்லுங்கள். அதில் மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அடுத்து, டேட்டா சேவர் (Data saver) விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். டேட்டா சேவர் அம்சம் ON நிலையில் இருக்கிறதா? என்பதை செக் செய்யுங்கள். ON-ல் இருந்தால், அதை OFF நிலைக்கு மாற்றவும்.2. உங்கள் போனில் இருக்கும் கூகுள் குரோம் (Google chrome browser) செல்லுங்கள் (அ) நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் வெப் பிரவுசரை (web browser) திறந்துக்கொள்ளுங்கள். பிறகு, அதன் மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்யவும். பிறகு செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை கிளிக் செய்க. அதன் உள்ளிருக்கும் சைட் செட்டிங் (Site Settings) என்ற விருப்பத்தில் கிளிக் செய்யவும். கீழே ஸ்க்ரோல் செய்து ஸ்டோரேஜ் (Storage) அல்லது டேட்டா ஸ்டோர்டு (Data stored) கிளிக் செய்யவும். இப்போது கிளியர் ஆல் டேட்டா (Clear all data) என்பதை கிளிக் செய்யுங்கள்.3. மீண்டும் கூகுள் குரோம் பிரவுசரை திறக்கவும். மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்வும். செட்டிங்ஸ் சென்று சிங்க் ஆன் (Sync On) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது இந்த ஆப்ஷன் ஆஃப் (OFF) நிலைக்கு மாறிவிடும். இப்படி செய்வதன் மூலமாகவும் உங்கள் போனின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியும்.இப்படி செய்வதன் மூலம் உங்கள் போனில் மந்தமாக செயல்படும் இன்டர்நெட் வேகத்தை உங்களால் அதிகரிக்க முடியும். அதேபோல், பேக்ரவுண்டில் இயக்கப்படும் தேவையில்லாத சில ஆப்ஸ்கள் டேட்டாவை தடுப்பதும், உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கும். உடனே இந்த செட்டிங்ஸ்களை உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் மாற்றி அமைத்து, இன்டர்நெட் வேகத்தை செக் செய்து பாருங்கள். கட்டாயம் சிறிதளவு வேகம் அதிகரித்திருக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன