சினிமா
மேடையில் கியூட்டா proposeபண்ண “டூரிஸ்ட் பாமிலி” இயக்குநர்…!ரசிகர்களை நெகிழவைத்த வீடியோ

மேடையில் கியூட்டா proposeபண்ண “டூரிஸ்ட் பாமிலி” இயக்குநர்…!ரசிகர்களை நெகிழவைத்த வீடியோ
தமிழ் சினிமா உலகில் நடிகர்கள், இயக்குநர்கள் என்று தனித்தனிப் பிரிவில் பலர் தங்களது திறமைகள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றனர். ஒரு இயக்குநர் தன் உணர்வுகளைக் கொண்டு நேரடியாக ரசிகர்களை வசீகரிப்பது என்பது மிகவும் அரிதான சம்பவம். அப்படிப்பட்ட ஒரு இனிமையான தருணத்தை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளார் ‘டூரிஸ்ட் பாமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.சமீபத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷன், ரசிகர்கள் எதிர்பார்க்காத முறையில் தனது நீண்ட நாள் தோழிக்கு மேடையில் Propose செய்துள்ளார். இந்த அழகான சம்பவம் நிகழ்ந்த விதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.அந்த நிகழ்வின் போது, சிரிப்பு, கலகலப்பான பேச்சு என்பன இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் திடீரென, அபிஷன் ஜீவிந்த் தனது தோழிக்கு மேடையில் அனைவரும் பார்க்கும் விதமாக propose செய்திருந்தார். அத்துடன், “என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா..?” என்றும் கேட்டிருந்தார்.இந்த உணர்வு பூர்வமான சம்பவத்தை நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் ரசித்தனர். அத்துடன் அதனை வீடியோ மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்தது.