வணிகம்
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 Vs கிளாஸிக் 350… இரண்டில் எந்த பைக் டாப்?

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 Vs கிளாஸிக் 350… இரண்டில் எந்த பைக் டாப்?
ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் 350 பைக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிதாக சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சென்னையில் ரூ. 1.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில், விலை குறைவாக கிடைக்கும் மாடலாக தற்போது வரை ஹண்டர் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹண்டர் 2022 மாடல், சமீபத்தில் 5 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தரப்பில் அதிகம் விற்பனையான இரண்டவது பைக்காக ஹண்டர் விளங்குகிறது. இந்த சூழலில் கிளாஸிக் 350 மற்றும் ஹண்டர் 350 இடையே இருக்கும் சிறப்பமசங்கள் குறித்த ஒப்பீட்டை இதில் காணலாம்.ஹண்டர் பைக், மூன்று வேரியண்டுகளில் 6 வண்ணங்களில் விற்பனை ஆகிறது. இதன் குறைந்தபட்ச விலை ரூ. 1.50 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ. 1.82 லட்சமாகவும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளாஸிக் 350 மாடலில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டன. மொத்தம் 9 வேரியண்ட்களில் கிடைக்கும் இதன் விலை ரூ. 1.93 லட்சத்தில் இருந்து, ரூ. 2.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஹண்டர் 350 பைக்கில் நிறைய மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், பின்புற சஸ்பென்ஷனில் டுயல் காயில் மாற்றம் சிறப்பனதாக கருதப்படுகிறது. இதன் மூலம் பயணம் இலகுவாக இருக்கும் என்று ரைடர்கள் கூறுகின்றனர். மேலும், கிரவுண்ட் கிளியரன்ஸும் 10 மிமி உயர்த்தப்பட்டுள்ளது. கிளாஸிக் 350 போலவே இதிலும் எல்.இ.டி முகப்பு விளக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 27W டைப் சி சார்ஜிங், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்சிகள் இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் என்று கருதப்படுகிறது.ஹண்டர் 350 பைக்கில் இருக்கும் அத்தனை அம்சங்களும் கிளாஸிக் 350 பைக்கிலும் இருக்கிறது. இதில் கூடுதலாக எல்.இ.டி பைலட் லேம்புகள் மற்றும் பிரேக், க்ளட்ச் லிவர்களை தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி ஆகியவை இருக்கிறது. இஞ்சினை பொறுத்தவரை இரண்டிலும், 349 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் ஜே சீரிஸ் இவற்றில் இடம்பெறுகிறது. 20.2 பி.ஹெச்.பி பவர் 6100 ஆர்.பி.எம் மற்றும் 27 என்.எம் டார்க் 4000 அர்.பி.எம்-ல் கிடைக்கிறது. இரண்டு பைக்கிலும் 5 கியர்கள் உள்ளன.இரண்டு பைக்குகளிலும் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. கிளாஸிக் 350 பைக், 195 கிலோ எடையுடன் இருக்கிறது. ஆனால், ஹண்டர் 350, 181 கிலோ எடை மட்டுமே இருப்பதால் கையாள்வதற்கு சற்று எளிதாக இருக்கும். வீல்பேஸ், உயரம் மற்றும் அகலம் போன்றவற்றில் சில மில்லி மீட்டர்கள் கிளாஸிக்கை விட, ஹண்டர் குறைவாக உள்ளது.பெரும்பாலும், இரண்டு பைக்கிலும் சில வசதிகள் மட்டும் வித்தியாசப்படுகின்றன. எனவே, உங்களுடைய பட்ஜெட் மற்றும் தேவை அறிந்து உங்களுக்கான வாகனத்தை தேர்வு செய்யலாம். 350 சிசி பைக்குகளில் ஜாவா 42 எஃப்.ஜே, ஹோண்டா சிபி 350 ஆர்.எஸ் மற்றும் டி.வி.எஸ் ரோனின் ஆகியவை கிளாஸிக் மற்றும் ஹண்டர் பைக்குகளுக்கு போட்டியாக இருக்கின்றன.