Connect with us

சினிமா

வடிவேலு கொடுத்த டார்ச்சர்..ஷோபனா தற்கொலைக்கு இதான் காரணம்!! பிரபல கொடுத்த தகவல்..

Published

on

Loading

வடிவேலு கொடுத்த டார்ச்சர்..ஷோபனா தற்கொலைக்கு இதான் காரணம்!! பிரபல கொடுத்த தகவல்..

சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றி தற்போது வெளியுலகத்திற்கு தெரிய வந்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பின் பல நடிகைகள் சந்தித்த பிரச்சனைகள் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா பேட்டியில் நடிகை ஷோபனா தற்கொலை குறித்து தற்போது பலரும் பேசி வருவதை பகிர்ந்து கொண்டுள்ளார்.அதில், நடிகை ஷோபனாவின் சகோதரி, என் அக்காவிற்கு அல்சர் பிரச்சனை இருந்ததால், வயிறு வலி அதிகமாக இருந்தது. சிக்கன் குனியாவால் ஷோபனா பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்ட சமயத்தில் காதல் தோல்வியும் ஏற்பட்டது. இதனால் உடல், மனம் பாதித்து தற்கொலை என்ற தப்பான முடிவு எடுத்துவிட்டார்.என் அக்கா அறிந்ததுமே, அவளைப்பற்றி நிறைய வதந்திகள் பரவின. அந்நேரத்தில் காமெடி நடிகர் ஒருவர்தான் அக்காவின் இறப்பிற்கு காரணம் என்றார். அதேபோல் நடிகர் வடிவேலு கூட இணைத்து பேசினார்கள். இதனால் நாங்கள் மிகவும் பாதிகப்பட்டு வெளியில் வரமுடியாமல் ஹவுஸ் அரெஸ்ட்டில் என் அம்மாவும் நாங்களும் இருந்தோம் என்று கூறியிருந்தார்.காமெடி நடிகையாக உருவானவர், வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார், திடீரென ஒருநாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. அவரது தற்கொலைக்கு காரணம், ஒரு காமெடி நடிகர் என பரவலாக அப்போதே சொன்னார்கள். ஆனால் சினிமா வட்டாரங்களில் வடிவேலு என்றும் மீடியாக்களில் காமெடி நடிகர் என்றும் பெயரை சோல்லாமல் கிசுகிசுத்தனர்.வடிவேலு தந்த டார்ச்சரால் தான் ஷோபனா இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம் என்று சினிமாவட்டாரத்தில் மறைமுகமாக சொன்னார்கள். ஆனால் ஏன் இதை ஷோபனா இறந்தபோதே சொல்லவில்லை. வடிவேலுவுக்கு சினிமா செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு போன்ற காரணங்களால் யாருமே அதை பற்றி பேசவில்லை என்று சேகுவேரா தெரிவித்துள்ளார். சக நடிகைகளை தன்னுடைய தங்கையாக, மகளாக வடிவேலு பாவித்திருக்க வேண்டும்.ஆனால், அப்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்று அவருடன் நடித்த பல நடிகைகள், பேட்டிகளில் சொல்லி வருவதை காண முடிகிறது. அடிப்படையில் உண்மை இல்லாமல் இதுபோன்ற பேச்சுக்கள் வராது என்று வெளிப்படையாக பேட்டியில் சேகுவேரா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன