இலங்கை
10 நாட்களில் 166 வைத்தியசாலை பணியாளர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

10 நாட்களில் 166 வைத்தியசாலை பணியாளர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களில் இரத்தினபுரி வைத்தியசாலை பணிக் குழாமைச் சேர்ந்த 166 பேர், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இரத்தினபுரி வைத்தியசாலை வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நேற்று விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்களில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, அப்பகுதியில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதாக, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.