இலங்கை
உச்சத்தை தொட்ட உப்பின் விலை ; பெரும் தட்டுப்பாடு நிலை

உச்சத்தை தொட்ட உப்பின் விலை ; பெரும் தட்டுப்பாடு நிலை
அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்,
ஒரு கிலோ உப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் ஆனையிறவு உப்பு அனைவரது கைகளிலும் என கூறப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் ஒரு கிலோ உப்பை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
இந்நிலை தொடருமாயின் தேங்காய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாடு போன்று உப்புக்கும் ஏற்படும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.