இலங்கை
கண்டி நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை

கண்டி நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கை
கண்டி நகர மக்களுக்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் உருவாகியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்ததாது காட்சிப்படுத்தப்பட்ட போது லட்சக் கணக்கான மக்கள் நகரில் குழுமியிருந்தனர்.
கண்டி நகரிற்கு பெருந்தொகையான மக்கள் வருகை தந்த காரணத்தினால் இவ்வாறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாந்திபேதி, வயிற்றோட்டம், சிக்கன்கூனியா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஒரு மாதம் சேர்க்கப்படும் கழிவுகள் தலதா கண்காட்சி காலத்தில் ஒரு நாளில் சேகரிக்கப்பட்டதாக கண்டி மாநகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்த காரணத்தினால் கழிப்பறை வசதிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் மக்கள் மஹாவலி ஆற்றின் இரு மருங்கையும் பயன்படுத்தியதாகவும் இதனால் சுற்றாடலுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சில யாத்ரீகர்கள் சில நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காய்ச்சல் மற்றும் தோல் நோய்கள் ஏற்கனவே பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.