இலங்கை
குளித்துக் கொண்டிருந்த யாத்திரீகர்கள் ஐவரை தாக்கிய மின்னல்

குளித்துக் கொண்டிருந்த யாத்திரீகர்கள் ஐவரை தாக்கிய மின்னல்
அனுராதபுரத்திற்கு யாத்திரை வந்து பசவக் குளம் (அபய) வாவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பயாகல, வல்பொல மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 24, 30, 38 மற்றும் 48 வயதுடைய ஐந்து பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (27) மதியம் மின்னல் தாக்கிய போது, யாத்ரீகர்கள் குழு குறித்த வாவியில் குளித்துக் கொண்டிருந்ததாகவும், ஒருவர் தொலைபேசி அழைப்பொன்றில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதோடு மின்னல் தாக்கத்தில் பசவக்குளம் வாவியின் குளிக்கும் பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை முறிந்து, மரத்தின் வேர்கள் வரை பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.