டி.வி
சிந்தாமணியின் வீட்டில் ரகளை பண்ணும் ஸ்ருதி..! ஆரம்பமாகியது முத்துவின் மாஸ்டர் பிளான்..!

சிந்தாமணியின் வீட்டில் ரகளை பண்ணும் ஸ்ருதி..! ஆரம்பமாகியது முத்துவின் மாஸ்டர் பிளான்..!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மீனாகிட்ட அந்தப் பணத்த நீ எப்புடி வச்சிருந்த என்று கேக்கிறார். அதுக்கு மீனா ஒரு மஞ்சள் கலர் பாக்கில சுத்தி வச்சிருந்தேன் என்று சொல்லுறார். மேலும் ரொம்ப கவனமா எடுத்துக் கொண்டு போயும் பணம் திருட்டுப் போய்ட்டு என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து நீ கவலப்படாத அந்தப் பணம் சிந்தாமணி வீட்ட தான் இருக்கும் என்று சொல்லுறார்.இதனை அடுத்து ஸ்ருதி யார் யாருக்கு என்ன ரோல் என்று சொல்லுங்க முத்து என்கிறார். அதுக்கு முத்து நீ தான் எங்க எல்லாருக்கும் பெரிய ஆபிஸரா நடிக்கப் போற என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரவி எல்லாம் சரி ஆனா இதையெல்லாம் மாட்டிக்காம பண்ணனும் என்று சொல்லுறார். பின் மீனாவும் இந்தப் பிரச்சனையில தேவையில்லாம ஸ்ருதி மாட்டுப்படாம இருந்தா சரி என்று முத்துவப் பாத்துச் சொல்லுறார்.மறுநாள் எல்லாரும் வருமான வரித்துறை ஆபிஸர் மாதிரி வெளிக்கிட்டு சிந்தாமணி வீட்ட போய் நிற்கிறார்கள். இதனை அடுத்து சிந்தாமணி பார்வதி வீட்ட ஏதோ கொண்டாட்டம் அங்க போவம் என்று டிரைவருக்கு சொல்லுறார். மேலும் இப்புடியான கொண்டாட்டம் எல்லாம் போனால் தான் மீனாவப் பற்றிய விஷயங்களை அறியலாம் என்று சொல்லுறார்.இதனை அடுத்து சிந்தாமணி வெளியில போறதப் பாத்த முத்து வாங்க உள்ள போலாம் என்று சொல்லுறார். பின் அங்க வந்து ஸ்ருதி நடிக்கிறதப் பாத்த ரவி இவ என்னடா இப்புடி நடிக்கிறா என்று முத்துவுக்குச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து வெளியில போன சிந்தாமணி வயிறு வலிக்குது என்று திரும்பி வீட்ட வாறார். இதுதான் இன்றைய எபிசொட்.