இந்தியா
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி… வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மாற்றம்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி… வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மாற்றம்
கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர். அதனால் திருப்பதி செல்லும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஐபி பக்தர்கள் காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவர்.அதேபோல வருகை தரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் மே 1 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தரிசனம் நடைமுறையை மாற்றி உள்ளது.மே மாதம் 1 ஆம் தேதி முதல் தல சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பந்தர்கள் காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இதற்கு, வி.ஐ.பி புரோட்டோக்கால் பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.