Connect with us

சினிமா

3 முறை கூட கர்ப்பம் ஆகலாம்..ஆனா தயார்ப்பால்.. வேதனையில் நடிகை சானியா மிர்சா..

Published

on

Loading

3 முறை கூட கர்ப்பம் ஆகலாம்..ஆனா தயார்ப்பால்.. வேதனையில் நடிகை சானியா மிர்சா..

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து பல கோப்பைகளை கைப்பற்றியவர் சானியா மிர்சா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்த சானியா மிர்சா, ஒரு மகனை பெற்றெடுத்தார். கடந்த ஆண்டு ஷோயப் மாலிக்கை விவாகரத்து செய்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், தனக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்டுவது எத்தனை சிரமமாக இருந்தது என்று விவரித்துள்ளார்.நான் என் குழந்தைக்கு 2.5 மாதம் முதல் 3 மாதம் வரை தான் தாய்ப்பால் ஊட்டினேன். குழந்தை பிரசவிப்பதைவிட இதுவரை எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் இன்னும் 3 முறை கூட கர்ப்பமாகி குழந்தை பெறலாம், ஆனால் தாய்பால் என்னால் ஊட்டுவதை செய்ய முடியுமா என தெரியவில்லை. உடலளவில் அது கடினமாக இல்லை, ஆனால் உணர்ச்சிபூர்வமாகவும் மனதளவிலும் அது நமது சக்தியை உறுஞ்சுவதாக இருந்தது. வேலை செய்யும் பெண்ணாக நம்ம அது கட்டிப்போடுவதாக இருந்தது.குழந்தை எப்போதும் நம்மை சார்ந்திருப்பது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது அதற்காக நாம் சரியாகத்தூங்காமல் நமது அத்தனை வேலைகளையும் குழந்தைக்கு பாலூட்டுவதை சுற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 3 மாதத்திற்கு பின் குழந்தை நல மருத்துவர் சென்றபோது இன்னும் ஒரு மாதம் செய்ய சொல்ல, ஆனால் நான் எனது மனதை இழந்துவிடுவேன் என்று அவரிடம் சொன்னேன்.இது உணர்ச்சிபூர்வமாக கடினமாக இருந்தது, ஏனென்றால் நாம் ஏற்கனவே பல வேலைகளை செய்கிறோம். குழந்தைப்பிறப்புக்கு பின் ஹார்மோன்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதனால் நாம் எப்போது பொதுமக்களின் பார்வையில் இருக்கிறோம். நம் உடலை கேலி செய்வார்கள்ம் ஆனால் இந்தக்குழந்தை எப்போதும் தனது உணவுக்காக என்னை சார்ந்திருப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது, நான் இல்லை என்றால் அந்தக்குழந்தை என்ன செய்யும் என்று நான் நினைத்தேன் என்று சானியா மிர்சா வேதனையுடம் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன