இலங்கை
இணையத்தளத்தின் ஊடாக உயர்ரப் பரீட்சைப் பெறுபேற்றைப் பெறும் வசதி!

இணையத்தளத்தின் ஊடாக உயர்ரப் பரீட்சைப் பெறுபேற்றைப் பெறும் வசதி!
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளும் தங்களின் பெறுபேறுகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தில் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்வதன் ஊடாக பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பார்வையிடலாம்.
சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.
மீள் பரீசிலணை செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னர் பாடசாலைகளுக்கு அச்சிடப்பட்ட பிரதிகள் அதிபர்களுக்கு வழங்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.