Connect with us

சினிமா

இதெல்லாம் அவசியமா?.. மனைவி குஷ்பு முன்பு ராதிகாவிடம் நக்கல் செய்த சுந்தர் சி

Published

on

Loading

இதெல்லாம் அவசியமா?.. மனைவி குஷ்பு முன்பு ராதிகாவிடம் நக்கல் செய்த சுந்தர் சி

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஐசரி கணேஷ். பல முக்கிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, VJ சித்து ஹீரோவாகும் டயங்கரம் உள்ளிட்ட பல படங்களை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.ஐசரி கணேஷ் மகள் திருமணம் முடிந்து நேற்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.இந்த திருமண நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.இந்நிலையில், திருமணத்தில் கலந்து கொள்ள வந்த ராதிகாவை பார்த்து இயக்குநர் சுந்தர் சி தனது மனைவியும் நடிகையுமான குஷ்பு முன்னால் கலாய்த்துள்ளார்.அதாவது, நடிகர் விச்சு விஸ்வநாதன் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த இயக்குநர் சுந்தர் சி அவர்கள் பேசுவதை கண்டு இதெல்லாம் அவசியமா என்று நக்கலுடன் கேட்டுள்ளார்.அப்போது அங்கு வந்த நடிகை குஷ்பூவும் ராதிகாவிடம் நலம் விசாரித்துள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன