சினிமா
இதெல்லாம் ஒரு படமா? கடுமையான விமர்சனம்.. ஆனாலும் வசூல் வேட்டையில் சூர்யாவின் ரெட்ரோ

இதெல்லாம் ஒரு படமா? கடுமையான விமர்சனம்.. ஆனாலும் வசூல் வேட்டையில் சூர்யாவின் ரெட்ரோ
சூர்யாவின் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த ரெட்ரோ படத்தின் மீது அதீத நம்பிக்கையை வைத்திருந்தனர்.கண்டிப்பாக இப்படம் மாஸ் கம் பேக் படமாக சூர்யாவிற்கு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் கூட முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.இந்த நிலையில் 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும்.