Connect with us

சினிமா

இயக்குநருக்கு கார் ஒன்றை பரிசளித்த சூர்யா -கார்த்தி..!

Published

on

Loading

இயக்குநருக்கு கார் ஒன்றை பரிசளித்த சூர்யா -கார்த்தி..!

பிரேம்குமார் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகிய மெய்யழகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக் ,அரவிந்சாமி , ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தினை சூர்யா ,ஜோதிகாவின் 2d entertainment தயாரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் பிரேம்குமார் அவர்களிற்கு அண்ணன் தம்பி இருவரும் இணைந்து ஒரு வெள்ளை நிற மஹிந்திரா Thar காரை பரிசாக வழங்கி உள்ளனர். மிகவும் மன திருப்தியுடன் இதனை செய்துள்ளனர்.தற்போது இதன் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் கார்த்தி அந்த இயக்குநரை பார்த்து “நீங்க அடிக்கடி சொல்லிட்டே இருந்திங்கல்லே” என சிரித்தபடி வாழ்த்து கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த வீடியோவினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன