இலங்கை
உபயோகிக்காது விடப்பட்டுள்ள அம்புலன்ஸ்கள் – நிர்வாகக் குறைபாடு காரணம்

உபயோகிக்காது விடப்பட்டுள்ள அம்புலன்ஸ்கள் – நிர்வாகக் குறைபாடு காரணம்
சுகாதார அமைச்சின் நிர்வாகக் குறைபாடு காரணமாக 300 முதல் 600 மில்லியன் ரூபா பெறுமதியான அம்புலன்ஸ்கள் நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தரித்துள்ளன என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அம்புலன்ஸ்கள் நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டவை எனவும் பராமரிப்பு வேலைகளுக்காக இந்த இடத்தில கொண்டுவந்து விடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வாகனங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்குடன் சுகாதார அமைச்சின் வாகனங்கள் யாவும் டிஜிற்றல் முறையில் பதிவு செய்யப்பட்டன என்றும், ஆனால் 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்குரிய அறிக்கைகள் கணக்காய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.