Connect with us

இந்தியா

எல்லையில் போர் பதற்றம்: பாக்., அத்துமீறல்களுக்கு இந்தியா பதிலடி

Published

on

India retaliation underway as Pakistan escalates attacks

Loading

எல்லையில் போர் பதற்றம்: பாக்., அத்துமீறல்களுக்கு இந்தியா பதிலடி

வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களை, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பை குறிவைத்து தாக்கி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்து மத்திய அரசு காலை 10.30 மணிக்கு விரிவான செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க உள்ளது.சனிக்கிழமை அதிகாலை, தங்களது விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சௌத்ரி ராய்ட்டர்ஸ் செய்திக்கு அளித்த தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார்.இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் வெளிப்படையான அத்துமீறல் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகளுடன் மேற்கு எல்லைகளில் தாக்குதல் தொடர்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று காலை 5 மணியளவில், அம்ரித்சரில் உள்ள கண்டோன்மென்ட் மீது ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பதிலளித்த வான் பாதுகாப்புப் பிரிவுகள் ட்ரோன்களை அழித்தன” என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: India retaliation underway as Pakistan escalates attacks”இந்தியாவின் இறையாண்மையை மீறவும், பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தவும் பாகிஸ்தான் மேற்கொள்ளும் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. #இந்தியராணுவம் எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும்,” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.OPERATION SINDOORPakistan’s blatant escalation with drone strikes and other munitions continues along our western borders. In one such incident, today at approximately 5 AM, Multiple enemy armed drones were spotted flying over Khasa Cantt, Amritsar. The hostile drones were… pic.twitter.com/BrfEzrZBuC அதிகாலை தாக்குதல்கள்:ஜம்முவில், விமானப்படை நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, அதிகாலை வரை நகரத்தில் விட்டுவிட்டு வெடிச்சத்தங்கள் கேட்டன. இதற்கிடையில், ராஜௌரி நகரம் கடுமையான பீரங்கி தாக்குதலுக்கு உள்ளானது. நகரத்தில் விடியும் நேரத்தில் பதான்கோட்டிலும் பல வெடிப்புகள் நிகழ்ந்தன. விட்டுவிட்டு நிகழ்ந்த இந்த வெடிப்புகள் குறைந்தது அரை மணி நேரம் நீடித்தன. பதிலுக்கு வான் பாதுகாப்பு பீரங்கிகளும் சுட்டுத் தாக்கின. நகரத்தில் எந்த ராணுவ நிறுவல்கள் குறிவைக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், மாவட்ட நிர்வாகம் உயர் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.சாலைகள் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சைரன் ஒலிக்கும் வரை குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், திறந்தவெளியில் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர். ஸ்ரீநகரில் அதிகாலை 5.20 மணிக்கும், பாரமுல்லாவில் அதிகாலை 4.50 மணிக்கும், உதம்பூரிலும் விமான நிலையம் அருகே வெடி சத்தங்கள் கேட்டன.சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்த தாக்குதல் அதிகரிப்பு, பாகிஸ்தான் தொடர்ந்து 2வது இரவாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள பல நகரங்களில் இராணுவ நிலைகளை குறிவைத்து ட்ரோன் படைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது.இந்திய ராணுவத்தால் நிலைநிறுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளால் பல ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டாலும், ஆயுதம் ஏந்திய ட்ரோன் ஒன்று பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூரில் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.வெள்ளிக்கிழமை இரவு, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா முதல் குஜராத்தில் உள்ள புஜ் வரை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டு கோடு ஆகிய இரண்டிலும் 26 இடங்களில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர், அவந்திப்போரா, நக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால் கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், குவார் பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்களும் இதில் அடங்கும். இந்த ட்ரோன்கள் பொதுமக்கள் மற்றும் ராணுவ நிலைகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதாக ராணுவம் கூறியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள், வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.சனிக்கிழமை அதிகாலை ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஆகியோர் ஏப்.22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியா-பாக்., ஆகிய இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும், ராணுவ ரீதியான அதிகரிப்பு பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இருதரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  “உடனடி பதற்றம் தணிப்புக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம், மேலும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட இரு நாடுகளையும் ஊக்குவிக்கிறோம். நாங்கள் நிகழ்வுகளை உன்னிப்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அந்த அறிக்கை கூறியது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன