உலகம்
கனேடிய தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அபாரமான வெற்றி!

கனேடிய தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அபாரமான வெற்றி!
கனேடிய பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஈழத்தமிழர்களான முன்னாள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
கனடாவின் பொதுத்தேர்தலில் இம்முறை ஆறு தமிழர்கள் போட்டியிட்டனர். அவர்களில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழர்களான ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் மற்றும் இந்தியத் தமிழரான அனிதா ஆனந்த் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன், லியோனல் லோகநாதன் ஆகியோரும், பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சனும் தோல்வியடைந்துள்ளனர். எனினும், அவர்களுக்கும் கணிசமான அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.