பொழுதுபோக்கு
காதலை சொல்ல தயங்கும் கணவன்: கலசத்தை மீட்பாரா ஹீரோ? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

காதலை சொல்ல தயங்கும் கணவன்: கலசத்தை மீட்பாரா ஹீரோ? ஜீ தமிழ் சீரியலில் இன்று!
கலசத்தை திருட நடக்கும் சதி.. கோவில் பூஜையில் நடந்தது என்ன? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசிக்காக சண்டையிட்டு சிலையை கைப்பற்ற கவின் அஞ்சலி யார் என்று தெரியாது என சொல்லிய நிலையில் இன்று, தர்மகர்த்தா வரதராஜன் எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்க லட்சுமி அதை வாங்க போக வேறு ஒருவரை கொடுக்க சொல்கிறார். இதனால் லட்சுமி வருத்தப்பட வரதராஜனின் மனைவி அவளிடம் வந்து பேச இதைப் பார்த்து வரதராஜன் சத்தம் போடுகிறார்.சிவராமன் சமாதானம் பேச வர அவரை அவமானப்படுத்துகிறார். பிறகு கோவில் கலசத்தை யார் தூக்க வேண்டும் என்பதை கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லி சாமியாடி சாமியாடி மாலையை தூக்கி வீச அது சிவராமன் கழுத்தில் விழுகிறது. இதனால் சிவராமன் கலசத்தை எடுத்து கொண்டு ஊர்வலமாக செல்ல வேண்டும் என சாமி உத்தரவு கொடுக்கிறது.மோனிகா துளசிக்கு பார்த்த மாப்பிள்ளையை கூப்பிட்டு சிவராமன் அதை நீயும் போ.. என்னுடைய ஆட்கள் கலசத்தை பறிக்க வருவாங்க. அவங்க கிட்ட சண்டை போட்டு நல்ல பேர் எடு என்று ஒரு திட்டம் போட்டு தருகிறாள். இன்னொரு பக்கம் சிலையை கடத்திய ரவுடிகள் கலசத்தையும் கடத்த திட்டம் போடுகின்றனர். சிவராமன் கலசத்துடன் ஊர்வலம் வர அப்போது சிலையை திருடிய ரவுடிகள் கலசத்தை திருட வர அவர்கள் மோனிகாவின் ஆட்கள் என நினைத்து துளசிக்குப் பார்த்து மாப்பிள்ளை சண்டையிட அவர்கள் அவனை அடித்து விட்டு செல்கின்றனர். பிறகு மீண்டும் கலசத்தை கைப்பற்ற வருகின்றனர்.கோவிலில் எல்லோரும் பரபரப்பாக காத்துக் கொண்டிருக்க தாமதமாக சிவராமன் கோவிலுக்கு வருகிறார். ப்ளாஷ் கட்டில் கலக்கத்தை திருட வந்த ரவுடிகளை வெற்றி மற்றும் மகேஷ் அடித்து ஓட விட்டது தெரிய வருகிறது. அதன் பிறகு ஒரு சிறு பூஜை நடக்கிறது. இந்த பூஜையைத் தொடர்ந்து எல்லோரும் நன்றாக உட்கார்ந்து நிலா சோறு சாப்பிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காதலை சொல்லாமல் மௌனம் காக்கும் சண்முகம்.. அமெரிக்கா கிளம்பிய பரணி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் பரணியை மிகுந்த அக்கறையோடு பார்த்துக் கொண்ட நிலையில் பரணிக்கு அவன் மீது காதல் உருவானது. இதனை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், பரணிக்கு நாட்டு வைத்திய பாட்டி சொன்னது போல மூன்று நாளில் கை சரியாகி விடுகிறது. அமெரிக்கா செல்ல தேவையான விசாவும் வந்து விடுகிறது. சண்முகம் அமெரிக்கா போவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்று சொல்லி விடுகிறான்.இதையடுத்து அடுத்த நாள் காலையில் பரணி அமெரிக்கா கிளம்ப எல்லோரும் அவளை வழி அனுப்ப தயாராகின்றனர். சண்முகம் கண்டிப்பா அமெரிக்கா போக கூடாதுன்னு இந்த யாகத்தை செய்யல.. நீ அமெரிக்கா போகணும்னு தான் செய்தேன் என்று சொல்கிறான். பரணி சண்முகத்தின் மனதை புரிந்து கொள்கிறாள். பரணியுடன் எல்லோரும் ஏர்போர்ட் கிளம்ப சண்முகம் நான் வரல இங்க போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறான்.பரணி நீ போகாத பரணின்னு ஒரு வார்த்தை சொல்லு நான் போக மாட்டேன் என மனதிற்குள் நினைத்துக் கொள்ள அதே போல் சண்முகம் நான் போல நீ ஒரு வார்த்தை சொல்லு பரணி என்று மனதில் நினைத்து கொள்கிறான். ஆனால் இருவரும் மனதுக்குள் இருக்கும் காதலை சொல்லாமல் மௌனம் காக்க பரணி ஏர்போர்ட் கிளம்பி செல்கிறாள். சண்முகம் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறாள். பரணி பீல் செய்வதை பார்த்த சௌந்தரபாண்டி நீ உள்ள போ என ஏர்போர்ட்டுக்குள் அனுப்பி வைத்து விடுகிறார்.பரணியும் சண்முகம் வர மாட்டானா என்ற ஏக்கத்துடன் உள்ளே செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கார்த்தியை புரிந்து கொள்ளும் ரேவதி.. சாமுண்டீஸ்வரிக்கு வந்த புது சிக்கல் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ரோகிணி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்த நிலையில் இன்று, கோவில் திருவிழாவில் எல்லோரும் கார்த்திக் மற்றும் ரேவதியை சாப்பாடு ஊட்டி விட சொல்ல இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு ரேவதி தெருவுக்குச் சென்றுவிட சாமுண்டீஸ்வரிக்கு ஒரு போன் கால் வருகிறது. சாமுண்டீஸ்வரி மகேஷ் பத்தி பேச ரேவதி இதை ஒட்டி கேட்டு விடுகிறாள்.அதன்பிறகு சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் காரில் ஏறி அவளுடன் மகேஷ் இருக்கும் இடத்திற்கு வருகிறாள். மகேசை கடத்தியது சாமுண்டீஸ்வரி தான் என்ற உண்மை ரேவதிக்கு தெரியவர, டிரைவர் ராஜாவை தப்பா நினைச்சுட்டோம் என்று வருத்தப்படுகிறாள். சாமுண்டீஸ்வரி நாளைக்கு உன்னை விட்டுடுவேன் ஒழுங்கா சாப்பிடு என்று மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி வீட்டில் நிறைய பணத்தை பதுக்கி வைத்திருக்கிறதா தகவல் இருப்பதாக சொல்லி வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வருகின்றனர். சந்திரகலா அக்கா மாட்டிக்கிட்டா இந்த திருவிழா நடக்காது என சந்தோஷப்படுகிறாள். பிறகு வருமான வரித்துறையில் வீடு முழுக்க சாதனை போட இடைப்பட்ட கேப்பில் ரேவதி மகேஷை தேடி குடோனுக்கு வருகிறாள்.வீட்டில் சோதனை முடிந்து பணம் எதுவும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் கிளம்பிச் செல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.