Connect with us

சினிமா

குழந்தைகளுக்காக வாழ்க்கையையே மாற்றிவிட்டேன்..’நிழற்குடை’ மூலம் காம்பேக் கொடுத்த தேவயானி.!

Published

on

Loading

குழந்தைகளுக்காக வாழ்க்கையையே மாற்றிவிட்டேன்..’நிழற்குடை’ மூலம் காம்பேக் கொடுத்த தேவயானி.!

90களில் தமிழ் சினிமாவின் மென்மையையும், கதைநயத்தையும் பிரதிபலித்த நடிகை என்றால் அது தேவயானி. எண்ணற்ற வெற்றிப் படங்களை தந்த தேவயானி, தற்பொழுது ‘நிழற்குடை’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் கால்பதித்துள்ளார்.இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, பட விழாவில் பங்கேற்ற தேவயானி, தனது திரைப் பயணத்தையும், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் காணாமல் போனதற்கான காரணங்களையும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’ திரைப்படம், ஒரு குடும்பத்தையும், அதன் உறவுப் பிணைப்புக்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நேர்மையான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் தேவயானி ஒரு தாயாகவும், உறவுகளை பாதுகாக்கும் நபராகவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் கதையமைப்பு தேவயானி திரையிலகில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு காத்திருந்ததற்கு கிடைத்த சரியான வாய்ப்பு என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பட விழா நிகழ்ச்சியில் தேவயானி கூறியதாவது, “ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன். நடிக்க ஆசை இருந்தது. ஆனா சரியான கதாப்பாத்திரங்கள் வரவில்லை. நடிக்கணும்னா அதற்கு ஏற்ற வகையில் சரியான வேடம் இருக்கணும். அப்படியான ஒரு கதை தான் இந்த ‘நிழற்குடை’.” என்றார்.அதனைத் தொடர்ந்து, தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேசிய தேவயானி, “எங்களுடைய குழந்தைகளுக்காக நாங்கள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டோம்” எனத் தெரிவித்தார். அத்துடன் “எங்களுடைய குழந்தைகளை கவனிக்க எப்போதுமே நாங்கள் தான் இருந்தோம். வேலைக்குப் போற ஆட்களை நம்பி குழந்தைகளை விட்டுட்டுப் போனதே கிடையாது. டிரைவர் இருந்தாலும் கூட, நானே டிரைவ் பண்ணி ஸ்கூல்ல விட்டிருக்கேன். இப்போ எங்க வீட்டில் டிரைவரே கிடையாது. சமையலுக்கு ஆட்கள் இருந்த சமயத்திலையும் நானே சமைப்பேன். இப்போ முழுக்க முழுக்க நாங்க தான் சமைக்கிறோம்.” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன