இலங்கை
சட்டவிரோத இறைச்சிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத இறைச்சிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் முள்ளம்பன்றி மற்றும் மான் இறைச்சிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 02 கிலோ கிராம் மான் இறைச்சியும் 05 கிலோ 500 கிராம் முள்ளம்பன்றி இறைச்சியும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால்கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்களுக்கு எதிராக 90 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.