Connect with us

பொழுதுபோக்கு

தந்தை இறந்த சோகம்; ஆனாலும் ரசிகர்களுக்காக இதை செய்தேன்: மோசமான நினைவுகளை பகிர்ந்த சமந்தா!

Published

on

Samantha Ruth Prab

Loading

தந்தை இறந்த சோகம்; ஆனாலும் ரசிகர்களுக்காக இதை செய்தேன்: மோசமான நினைவுகளை பகிர்ந்த சமந்தா!

தனது முதல் தயாரிப்பு திரைப்படமாக “சுபம்” படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு, சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில் தனது தந்தை இறந்த செய்தி அறிந்து மும்பையில் இருந்து உடனடியாக சென்னைக்கு புறப்பட வேண்டிருந்ததாகவும், அப்போது ரசிகர்களுக்காக அந்த சோகத்திலும் நான் சிரிக்க வேண்டி இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.  ஆங்கிலத்தில் படிக்க: Samantha Ruth Prabhu had to smile for fan pictures hours after her father passed away: ‘No normal person would be expected to do that’சமீபத்தில் கலாட்டா பிளஸ் உடனான உரையாடலில் சமந்தா இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். “நான் பொதுவாக போட்டோ எடுக்க வரும் ரசிகர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள். கடந்த டிசம்பரில் என் அம்மாவிடமிருந்து என் அப்பா இறந்துவிட்டார் என்று காலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் மும்பையிலிருந்து சென்னைக்கு முதல் விமானத்தில் புறப்பட வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் அப்பா இறந்ததை நினைத்து நான் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன். நீண்ட நாட்களாக நான் என் அப்பாவிடம் பேசவில்லை. விமானத்தில் நான் எந்தவிதமான எதிர்வினையும் இல்லாமல் உறைந்து போயிருந்தேன். அப்போது நிறைய பேர் என்னிடம் புகைப்படம் எடுக்கக் கேட்டார்கள். நானும் நின்று அவர்கள் அனைவருடனும் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்,” என்று அவர் கூறினார்.புகைப்படம் கேட்டவர்களுக்கு மறுப்பு தெரிவிக்காததற்கான காரணத்தை விளக்கிய சமந்தா, “நீங்கள் வெறுமனே ‘இல்லை’ என்று சொன்னால், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவரிடம் சென்று புகைப்படம் எடுக்கக் கேட்பதற்கு நிறைய தைரியம் தேவைப்படுகிறது. அதனால் நான் ‘இல்லை’ என்று சொல்லி அவர்களை வருத்தப்படுத்த விரும்பவில்லை,” என்றார்.சமந்தாவின் இந்த நிலை, அவரது தொழிலின் பின்னடைவுகள் மற்றும் ஒரு பொதுவான நபராக இருப்பதில் இருக்கும் சிரமங்களையும் அவருக்கு உணர்த்தியது. “அந்தப் புகைப்படங்களுக்கு நான் சிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு விஷயம் என்னை உலுக்கியது. எந்தவொரு சாதாரண நபரும் தன் தந்தை இறந்த நாளில் இப்படி சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும் எதிர்பார்க்கப்பட மாட்டார்கள். இது முற்றிலும் வேறொரு உலகம்,” என்று அவர் கூறினார்.சமந்தா ரூத் பிரபுவின் தந்தை ஜோசப் பிரபு நவம்பர் மாதம் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “நாம் மீண்டும் சந்திக்கும் வரை, அப்பா,” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, தனது தந்தையுடனான கடினமான உறவு குறித்து அவர் பேசியிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “எனக்கும் என் அப்பாவுக்கும் இடையே ஒரு கடினமான உறவு இருந்தது,” என்று சமந்தா கூறியிருந்தார்.மேலும், “நான் வளரும்போது, அங்கீகாரத்திற்காக போராட வேண்டியிருந்தது. என் தந்தை உட்பட பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் அப்படித்தான்; அவர்கள் உங்களைப் பாதுகாப்பதாக நினைக்கிறார்கள். ‘நீ அவ்வளவு புத்திசாலி இல்லை’, ‘இந்திய கல்வியின் தரம் அப்படி இருப்பதால் தான் நீ முதல் ரேங்க் வாங்குகிறாய்’ என்று என் அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் உண்மையில் புத்திசாலி இல்லை, போதுமானவள் இல்லை என்று நம்பினேன்.அதனால் என் முதல் படமான ‘ஏ மாயா சேசாவே’ வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, மக்கள் என் மீது அன்பையும் பாராட்டையும் பொழிந்தார்கள். ஆனால் நான் அங்கீகாரத்திற்காகவும், யாராவது என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேச வேண்டும் என்பதற்காகவும் போராடி வளர்ந்தவள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நான் அதற்குப் பழக்கப்படவில்லை என்று சமந்தா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன