இலங்கை
தராகி சிவராம், ரஜிவர்மன் ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

தராகி சிவராம், ரஜிவர்மன் ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் உதயன் அலுவலகச் செய்தியாளர் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நினைவு தூபி முன்பாக நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வு நடந்த பகுதியில் பொலிஸார் சீருடையிலும், சிவில் உடையிலும் குவிழக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நிகழ்வில் பங்குகொண்டவர்களை ஒளிப்படம் மற்றும் காணொலி எடுத்தனர் என்று கூறப்படுகின்றது.