சினிமா
திடீரென தள்ளிவைக்கப்பட்ட ‘Thug Life’ படத்தின் இசைவெளியீட்டு விழா..!! சோகத்தில் ரசிகர்கள்..

திடீரென தள்ளிவைக்கப்பட்ட ‘Thug Life’ படத்தின் இசைவெளியீட்டு விழா..!! சோகத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் சிறப்பான கூட்டணிகளில் ஒன்றாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்தினம் ஆகியோரின் கூட்டணி விளங்குகின்றது . இந்த இருவரும் 1987ம் ஆண்டு வெளிவந்த ‘நாயகன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்கினார்கள். இப்போது, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் Thug Life’ படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள்.இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் சிம்பு இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். அவருடன் திரிஷா, மலையாள திரையுலகின் முக்கிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, பாலிவுட் நடிகர் அலி பசல் போன்றோரும் இணைந்துள்ளனர். இதில் ஒவ்வொருவரும் தனித்துவமான வேடங்களில் காட்சியளிக்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.‘Thug Life’ படத்தை தயாரித்திருப்பது இந்திய சினிமாவின் மிகப்பெரும் நிறுவனங்களாக விளங்குகின்ற ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ். இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் திகதி உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இதற்கான விழாக்கள், புரொமோஷன்கள் அனைத்தும் தீவிரமாக திட்டமிடப்பட்டிருந்தன.‘Thug Life’ படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ம் திகதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழா, சென்னையில் நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் வந்திருந்தன. ஆனால் இப்போது அந்த நிகழ்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனாலேயே இசை வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டது என தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.