இலங்கை
தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்
தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று நடந்துள்ளது.
அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொன்ஸ்தாபிளே உயிரிழந்தவராவார்.
நேற்றுக்காலை பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த இவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை பருத்தித்துறை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்று அறிக்கையில் உயிரிழப்புக்கு மாரடைப்புக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.