சினிமா
பிரபல காமெடி நடிகர் புற்றுநோயால் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..

பிரபல காமெடி நடிகர் புற்றுநோயால் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல வெற்றிபெற்ற படங்களில் நடித்து சினிமா துறையில் 30 ஆண்டுகளாக சிறந்த குணச்சித்திர நடிகராக பிரபலமான நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, இன்று உயிரிழந்தார்.சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இந்தப் பெயர் உண்டு. அவரது அழகான நடிப்பு காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். அவரது மரணம் சினிமா உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மருத்துவர்கள் அவற்றின் 4-வது கட்டம் என தெரிவித்து இருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று காலமானார். இந்நிலையில் அவரது மரணத்திற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.