இலங்கை
யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து குடும்பப் பெண் மரணம்

யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து குடும்பப் பெண் மரணம்
கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைநகர், மருதபுரத்தைச் சேர்ந்த திருச்செந்தில் சரோஜாதேவி (வயது-58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றுக் கிணற்றில் குளிக்கச் சென்றபோது, கிணற்று மேடையில் இருந்த பாசி வழுக்கி பாதுகாப்புக் கட்டில்லாத கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.
அவரைக் கிணற்றில் இருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டாரென மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இறப்பு விசாரணைகளை தீவகம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நாகராசா தியாகராசா மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.