இலங்கை
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், ஏழாலையில் இன்று (08.05.2025) மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 வயதான குணரட்ணம் குமரன் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் முதல் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் மழை பெய்து வருகின்றது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் இருக்கும் என்று எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.