Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்துக்குக் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது

Published

on

Loading

யாழ்ப்பாணத்துக்குக் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது

புதுக்குடியிருப்பில் இருந்து யாழப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட முதுரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மரக்குற்றிகளை ஏற்றிவந்த சிறியரக லொறி மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன், அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏ-35 பிரதான வீதியில் நடந்துள்ளது. 12 முதுரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன