Connect with us

சினிமா

ரெட்ரோவிற்கு நெகட்டிவ் விமர்சனம்; Next படம் அஜித்தோட..கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்.!

Published

on

Loading

ரெட்ரோவிற்கு நெகட்டிவ் விமர்சனம்; Next படம் அஜித்தோட..கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்.!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்கத்தால் பல ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர்களில் ஒருவரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தனது திரைப்படமான “ரெட்ரோ” குறித்து மிகவும் சிறப்பாகப் பேசியுள்ளார். இதில் அவர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, “என்னுடைய படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆனதுமே எல்லாருக்கும் பிடிச்சுப் போகும் என்று எதிர்பார்ப்பதே இல்ல. என் படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவது வழக்கம். அதேபோல ‘ரெட்ரோ’ படத்துக்கும் சில விமர்சனங்கள் வந்திருக்கு. அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது ஒரு இயல்பு.” என்றார்.இவ்வாறு கூறியதன் மூலம், ஒரு படத்தை மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பது ஒரு தனி விடயம் என்றும், ஒரு படத்தின் உண்மையான வெற்றியை அதன் கலெக்சன் தான் நிரூபிக்கும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.”ரெட்ரோ” திரைப்படம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியானதோடு, 1980களின் பின்னணியில் அமைந்த ஒரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாகவே ரசிகர்களிடம் வந்தது. பல விமர்சனங்கள் படம் சிறப்பாக இல்லை என்று தெரிவித்தாலும், படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், “நீங்க விமர்சனத்தைப் பாத்து படம் ஓடலன்னு சொல்ல முடியாது. ரெட்ரோ படம் கலெக்சன்ல நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது.” என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். மேலும் சமீப நாட்களில் சில சமூக ஊடகங்களில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தல அஜித்துடன் புதிய படம் செய்யவிருக்கிறார் என்ற தகவல்கள் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு கார்த்திக், “நான் அஜித்தோட படம் பண்ணப்போறேன் என்று சொல்லல. அது மிகவும் பொய்யான தகவல்.” என்று கூறியிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன